திரைப்படம் : சந்திரமுகி
பாடல் : கொஞ்ச நேரம் கொஞ்ச
இசை : வித்யாசாகர்






பெண் :
கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் கொஞ்சி பேச கூடாதா ?
அந்த நேரம் அந்தி நேரம் அன்பு தூறல் போடாதா ?

கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் கொஞ்சி பேச கூடாதா ?
அந்த நேரம் அந்தி நேரம் அன்பு தூறல் போடாதா ?

ஆண் :
கொஞ்சும் நேரம் கொஞ்சும் நேரம் எல்லை மீற கூடாதா ?
இந்த நேரம் இன்ப நேரம் இன்னும் கொஞ்சம் நீளாதா ?

பெண் :
கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் கொஞ்சி பேச கூடாதா ?
அந்த நேரம் அந்தி நேரம் அன்பு தூறல் போடாதா ?

~~@@~~ பின்னிசை ~~@@~~

பெண் : 
கண்ணில் ஓரழகு கையில் நூறழகு உன்னால் பூமி அழகே

ஆண் :
உன்னில் நான் அழகு என்னில் நீ அழகு நம்மால் யாவும் அழகே

பெண் :
ஓ..ஓ...கண்ணதாசன் பாடல் வரி போல,கொண்ட காதல் வாழும் நிலையாக

ஆண் :
கம்பன் பாடி போன தமிழ் போல, எந்த நாளும் வேகம் நலமாக

பெண் :
மழை நீயாக வயல் நானாக, வேளாண்மை இனி...ஓ....ஓ.....

ஆண் :
கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் கொஞ்சி பேச கூடாதா ?
அந்த நேரம் அந்தி நேரம் அன்பு தூறல் போடாதா ?

~~@@~~ பின்னிசை ~~@@~~

பெண்  - லாலால...லாலால....லாலாலா........

~~@@~~ பின்னிசை ~~@@~~

ஆண் :
கொக்கி போடும் விழி , கொத்தி போகும் இதழ், நித்தம் கோலம் இடுமா..ஆ...

பெண் :
மக்கள் யாவரையும் அன்பால் ஆளுகின்ற உன்னை போல வருமா

ஆண் :
வெளி வேஷம் போட தெரியாமல் எனதாசை கூட தடுமாறும்

பெண் :
ம்ஹ்ம்ம்....பல கோடி பேரின் அபிமானம்,உனக்காக ஏங்கும் எதிர்காலம்

ஆண் :
நீ என்னோடு நான் உன்னோடு மெய்தானே இது...ஆ...ஆ..ஆஆ !!

பெண் :
கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் கொஞ்சி பேச கூடாதா ?
அந்த நேரம் அந்தி நேரம் அன்பு தூறல் போடாதா ?

ஆண் :
கொஞ்சும் நேரம் கொஞ்சும் நேரம் எல்லை மீற கூடாதா ?

பெண் :
இந்த நேரம் இன்ப நேரம் இன்னும் கொஞ்சம் நீளாதா  ஆ ஆ ஆ !!

0 comments:

Post a Comment

Kindly drop in your thoughts here :

 
Top