திரைப்படம் : ஜில்லுனு ஒரு காதல்
பாடல் : முன்பே வா 
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்

பெண் :
முன்பே வா என் அன்பே வா …. ஊனே வா உயிரே வா
முன்பே வா என் அன்பே வா …. பூ பூவாய் பூப்போம் வா

நான் நானா ? கேட்டேன் என்னை நானே
நான்...நீயா ? நெஞ்சம் சொன்னதே

முன்பே வா என் அன்பே வா …. ஊனே வா உயிரே வா
முன்பே வா என் அன்பே வா …. பூ பூவாய் பூப்போம் வா

குழு :
ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய்
கோலம் போட்டவள் கைகள் வாழி வளையின் சத்தம் .....
ஜல் ஜல் .... ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய்
கோலம் போட்டவள் கைகள் வாழி 
சுந்தர மல்லிகை சந்தன மல்லிகை
சிந்திய புன்னகை வண்ணம் என்ன ?

பெண் :
ஆ...ஆ...ஆ....ஆ....ஆ.....!! 
பூவைத்தாய் பூ வைத்தாய் .... நீ பூவைக்கோர் பூ வைத்தாய்
மன பூவைத்து பூவைத்து பூவைக்குள் தீ வைத்தாய்..ஓ...ஓ...

ஆண் :
நீ நீ நீ மழையில் ஆட
நான் நான் நான் நனைந்தே வாட
என் நாளத்தில் உன் ரத்தம் நாடிக்குள் உன் சத்தம் .... உயிரே, ஹோ..

பெண் :
தோழி ஒரு சில நாழி
தனியனாய் ஆனால் தரையினில் மீன்...ஹ்ம்ம்.... ஹ்ம்ம்.

முன்பே வா என் அன்பே வா …. ஊனே வா உயிரே வா 
நான் நானா ? கேட்டேன் என்னை நானே

ஆண் :
நான் நானா ? கேட்டேன் என்னை நானே

பெண் : 
முன்பே வா என் அன்பே வா …. பூ பூவாய் பூப்போம் வா...

~~@@~~ பின்னிசை ~~@@~~ 

ஆண் :
நிலவிடம் வாடகை வாங்கி ... விழி வீட்டினில் குடி வைக்கலாமா ?
நான் வாழும் வீட்டுக்குள் வேறாரும் வந்தாலே தகுமா

பெண் :
தேன் மலை தேக்குக்கு நீ தான் .... உந்தன் தோள்களில் இடம் தரலாமா ?
நான் சாயும் தோள் மேல் வேறாரும் சாய்ந்தாலே தகுமா

ஆண் :
நீரும் செம்புல சேறும் கலந்தது போலே கலந்தவளா .....

பெண் :
முன்பே வா என் அன்பே வா …. ஊனே வா உயிரே வா
முன்பே வா என் அன்பே வா …. பூ பூவாய் பூப்போம் வா

ஆண் :
நான் நானா ? கேட்டேன் என்னை நானே
நான்...நீயா ? நெஞ்சம் சொன்னதே
முன்பே வா 

பெண் : 
முன்பே வா என் அன்பே வா …. ஊனே வா உயிரே வா
முன்பே வா என் அன்பே வா …. பூ பூவாய்...... பூப்போம் வா ...................

குழு :
ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய்
கோலம் போட்டவள் கைகள் வாழி வளையின் சத்தம் .....
ஜல் ஜல் .... ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய்
கோலம் போட்டவள் கைகள் வாழி 
சுந்தர மல்லிகை சந்தன மல்லிகை
சிந்திய புன்னகை வண்ணம் என்ன ?

ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய்
கோலம் போட்டவள் கைகள் வாழி வளையின் சத்தம் .....
ஜல் ஜல் .... ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய்
கோலம் போட்டவள் கைகள் வாழி 
சுந்தர மல்லிகை சந்தன மல்லிகை
சிந்திய புன்னகை வண்ணம் என்ன ?

0 comments:

Post a Comment

Kindly drop in your thoughts here :

Top