திரைப்படம் : சின்னகவுண்டர்
பாடல் : முத்து மணி மாலை
இசை : இளையராஜா





ஆண் :
முத்துமணி மாலை ஒன்ன தொட்டு தொட்டு தாலாட்ட
வெக்கத்துல சேலை கொஞ்சம் விட்டு விட்டு போராட
உள்ளத்துல நீ தானே, உத்தமி உன் பேர்தானே
ஒரு நந்தவன பூ தானே, புது சந்தனமும் நீ தானே
முத்துமணி மாலை ஒன்ன தொட்டு தொட்டு தாலாட்ட

~~@@~~ பின்னிசை ~~@@~~

பெண் :
கொலுசுதான் மௌனமாகுமா, மனசுதான் பேசுமா

ஆண் :
மேகந்தான் நிலவை மூடுமா, மவுசுதான் கொறையுமா

பெண் :
நேசபட்டு வந்த பாசக்கொடிக்கு, காசிபட்டு தந்த ராசாவே

ஆண் :
வாக்கபட்டு வந்த வாசமலரே, வண்ணம் கலையாத ரோசாவே

பெண் :
தாழம்பூவுல வீசும் காத்துல வாசம் தேடி மாமா வா

ஆண் :
முத்துமணி மாலை 

பெண்:
என்ன தொட்டு தொட்டு தாலாட்ட

ஆண் :
வெக்கத்துல சேலை 

பெண் :
கொஞ்சம் விட்டு விட்டு போராட

~~@@~~ பின்னிசை ~~@@~~

ஆண் :
காலுல போட்ட மிஞ்சிதான் காதுல பேசுதே

பெண் :
கழுத்துல போட்ட தாலி தான் காவியம் பாடுதே

ஆண் :
நெத்திசுட்டி ஆடும் உச்சந்தலையில் பொட்டு வெச்சதாரு நான்தானே

பெண் :
அத்திமர பூவும் அச்சப்படுமா பக்கத்துணை யாரு நீதானே

ஆண் :
ஆசை பேச்சுல பாதி மூச்சுல லேசா தேகம் சூடேற

பெண் :
முத்துமணி மாலை என்ன தொட்டு தொட்டு தாலாட்ட
வெக்கத்துல சேலை கொஞ்சம் விட்டு விட்டு போராட
உள்ளத்துல நீ தானே, உத்தமனும் நீதானே
ஒரு நந்தவன பூ தானே, புது சந்தனமும் நீ தானே  

ஆண் :
ஒரு நந்தவன பூ தானே, புது சந்தனமும் நீ தானே


0 comments:

Post a Comment

Kindly drop in your thoughts here :

 
Top