திரைப்படம் : எந்திரன்
பாடல் : கிளிமஞ்சாரோ மலைக் கனிமஞ்சாரோ
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்





குழு :
ஆஹா..ஆஹா    ஆஹா..ஆஹா

ஆண் :
கிளிமஞ்சாரோ மலை கனி மஞ்சாரோ 
கன்னக் குழி மஞ்சாரோ
யாரோ யாரோ

குழு :
ஆஹா..ஆஹா

ஆண் :
மோஹன்ஜதாரோ உன்னில் நொழஞ்சதாரோ 
பைய்ய கொழஞ்சதாரோ
யாரோ யாரோ

குழு :
ஆஹா..ஆஹா

பெண் :
காட்டுவாசி காட்டுவாசி பச்சையாக கடியா
முத்தத்தாலே வேகவெச்சு சிங்கபல்லில் உரியா

குழு :
ஆஹா..ஆஹா

பெண் :
மலைப்பாம்பு போல வந்து மான்குட்டிய புடியா
சுக்கு மெளகு தட்டி என்னை சூப்பு வெச்சி குடியா

ஆண் :
ஏவாளுக்கு தங்கச்சியே என்கூடத்தான் இருக்கா
ஆளுயர ஆலிவ் பழம் அப்படியே எனக்கா
அக்கக்கோ அடி கின்னிக்கோழி
அப்பப்போ என்ன பின்னிக்கோடி
இப்பப்போ முத்தம் எண்ணிக்கோடி

பெண் :
இப்பப்ப்.... எண்ணிக்கோ நீ

ஆண் :
கிளிமஞ்சாரோ மலைக் கனி மஞ்சாரோ 
கன்னக் குழி மஞ்சாரோ
யாரோ யாரோ
மோஹன்ஜதாரோ உன்னில் நொழஞ்சதாரோ 
பைய்ய கொழஞ்சதாரோ
யாரோ யாரோ

~~@@~~ பின்னிசை ~~@@~~

ஆண் :
கொடி பச்சையே எலுமிச்சையே உன் மேல் உன் மேல் உயிர் இச்சையே

பெண் :
அட நூறு கோடி தசை ஒவ்வொன்றிலும் உந்தன் பேரே இசை

ஆண் :
இனிச்சக்கரே அடிச்சக்கரே மனச ரெண்டா மடிச்சக்கரே

பெண் :
நான் ஊற வைத்த கனி என்னை மெல்ல ஆற வைத்து குடி

ஆண் :
வேர் வரை நுழையும் வெய்யிலும் நான் –நீ இலை திரை ஏன் இட்டாய்

பெண் :
உதட்டையும் உதட்டையும் பூட்டிக்கொண்டு ஒரு யுகம் முடித்து திற அன்பாய்

ஆண் :
அக்கக்கோ அடி கின்னிக்கோழி
அப்பப்போ என்ன பின்னிக்கோடி
இப்பப்போ முத்தம் எண்ணிக்கோடி

பெண் :
இப்பப்ப்.... எண்ணிக்கோ நீ

ஆண் :
கிளிமஞ்சாரோ மலைக் கனி மஞ்சாரோ 
கன்னக் குழி மஞ்சாரோ
யாரோ யாரோ

குழு :
ஆஹா..ஆஹா

ஆண் :
மோஹன்ஜதாரோ உன்னில் நொழஞ்சதாரோ 
பைய்ய கொழஞ்சதாரோ
யாரோ யாரோ

~~@@~~ பின்னிசை ~~@@~~

பெண் :
சுனைவாசியே சுகவாசியே தோல் கருவி எனை வாசியே

ஆண் :
என் தோள்குத்தாட பலா றெக்கை கட்டி கால் கொண்டாடும் நிலா

பெண் :
மர தேகம் நான் மரங்கொத்தி நீ வன தேசம் நான் அதில் வாசி நீ

ஆண் :
நூறு கிராம் தான் இடை உனக்கு இனி யாரு நான் தான் உடை

பெண் :
ஐந்தடி வளர்ந்த ஆட்டு செடி எனை மேய்ந்துவிடு மொத்தம்

ஆண் :
பச்சை பசும்புல் நீயானால் புலி புல் தின்னுமே என்ன குத்தம்

பெண் :
அக்கக்கோ நான் கின்னிக்கோழி
அப்பப்போ எனை பின்னிக்கோ நீ
இப்பப்போ முத்தம் எண்ணிக்கோ நீ
இப்பப்ப்...எண்ணிக்கோ நீ

ஆண் :
அக்கக்கோ அடி கின்னிக்கோழி
அப்பப்போ என்ன பின்னிக்கோடி
இப்பப்போ முத்தம் எண்ணிக்கோடி

பெண் :
இப்பப்ப்.... எண்ணிக்கோ நீ

0 comments:

Post a Comment

Kindly drop in your thoughts here :

 
Top